சிவகங்கை:
சிவகங்கையில் 56 நெல் கொள்முதல் மையத்தில் ஊழல் முறைகேடு செய்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பேரவை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜெயராமன் தலைமையிலும் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் முன்னிலையிலும் நடைபெற்றது. சிவகங்கையில் சிவில் சப்ளை கார்ப்பரேஷன் சார்பாக விவசாயிகளிட மிருந்து 56 மையங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அப்போது ஏராளமான முறைகேடுகளும் ஊழலும் அதிகாரிகளின் உடந்தையோடு நடைபெற்றது. புல்லுக்கோட்டை நெல் கொள்முதல் நிலையத்தின் பொறுப்பாளர்நெல்கொள்முதல் செய்வதற்கு லஞ்சம்பெற்றபோது, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கு சிவில் சப்ளை கார்ப்பரேஷனின் மண்டல மேலாளர் தான் பொறுப்பேற்க வேண்டும். இதுகுறித்து சிபிசிஐடிவிசாரணை செய்ய வேண்டும். உரவிலையை பலமடங்கு உயர்த்தியதை திரும்பப் பெற வலியுறுத்தி மாவட்டம்முழுவதும் ஏப்ரல் 21 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்டபல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.