tamilnadu

img

எழுத்தாளர் கி.ரா துணைவியார் மறைவு: கே.பாலகிருஷ்ணன் அஞ்சலி

புதுச்சேரி, செப். 26- எழுத்தாளர் கி.ராஜநாராயண னின் துணைவியார் கணவதி அம்மாள் உடலுக்கு கே.பால கிருஷ்ணன் அஞ்சலி செலுத்தி னார். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் செயல் வீரர்க ளில் ஒருவரும், தமிழகத்தின் புகழ்பெற்ற கரிசல் எழுத்தாள ரும், சாகித்ய அகாடமி விருது  பெற்றவருமான கி.ராஜநாராயண னின்  துணைவியார் கணவதி  அம்மாள் (வயது 87), புதனன்று (செப்.25) இரவு காலமானார். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள கி.ராஜநாராயணன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கணவதி அம்மாள் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கட்சியின் பிரதேச  செயற்குழு உறுப்பினர் ராமச்சந்தி ரன், இடைக்குழு செயலாளர் அன்புமணி ஆகியோரும் அஞ்சலி  செலுத்தினர். எழுத்தாளர் கி.ரா வையும் அவ ரது குடும்பத்தாரையும் சந்தித்த  கே.பாலகிருஷ்ணன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

எழுத்தாளர்கள்
 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்  தாளர் - கலைஞர்கள் சங்கத்தின்  மாநில கவுரவத் தலைவர்  தமிழ்ச்செல்வன், பொதுச்செய லாளர் ஆதவன்தீட்சண்யா, பொருளாளர் ராமச்சந்திரன், மூத்த எழுத்தாளர்கள் பேரா சிரியர் அருணன், வழக்கறிஞர் செந்தில்நாதன், மதுரை வேலா யுதம், நீலா, புதுச்சேரி தலைவர்  வீர. அரிகிருஷ்ணன், செயலாளர் உமா, மாநிலக்குழு உறுப்பினர் விநாயகம்  ஆகியோரும்  கண வதி அம்மாள் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு எழுத்தாளர் கி.ரா வை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இரா. முத்தரசன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநில செயற்குழு விடுத்துள்ள இரங்கல் செய்தி யில்,“ இலக்கிய படைப்புலகில் கி.ரா. என்று அன்போடு அழைக்  கப்படும் படைப்பாளர் கி.ராஜ நாராயணன் வாழ்விணையர் கண வதி அம்மாள் (87) காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். ‘கரிசல் இலக்கியத் தந்தை’ யின் குடும்ப வாழ்க்கைப் பய ணத்தை வழிநடத்திச் சென்றவர். கி.ரா.வின் எழுத்துப் பணிக்கு உகந்த சூழலை உருவாக்கி தரு வதே தம் பணி என்று வாழ்ந்த குடும்பத் தலைவரை கி.ரா.வின்  குடும்பம் இழந்து விட்டது. எந்த  வார்த்தை கூறியும் ஆறுதல் படுத்த இயலாது. அவரது குடும்பத்தின் துயரைப் பகிர்ந்து கொள்கிறோம். காலமான கண வதி அம்மாள் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த  அஞ்சலி தெரிவித்துக் கொள்கி றது. அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தின ருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக் கொள்கிறது என்று மாநிலச் செயலாளர் இரா. முத்தர சன் தெரிவித்திருக்கிறார்.