tamilnadu

img

இடைத்தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை: கமல்ஹாசன்

சென்னை, அக். 2- பணப்பட்டுவாடா நடப்பதால் இடைத்தேர்தல் களில் போட்டியிடவில்லை என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தெரி வித்துள்ளார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பழவேற்காடு லைட் அவுஸ் குப்பம் கிராமசபை கூட்டத்தில் கமல்ஹாசன் பார்வையாளராக கலந்து கொண்டார். அந்த பகுதிகளின் அடிப்படை பிரச்சனை கள் குறித்த கலந்துரையாடலும் அதற்கான தீர்வுகளுக்கான முன்னெடுப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. பணப்பட்டுவாடா நடப்பதால் இடைத் தேர் தல்களில் போட்டியிடவில்லை. பழ வேற்காடு பகுதியில் மாதம் ஒருமுறை மருத்துவமுகாம் நடத்தப்படும் என்று உறுதி அளிக்கிறேன். இந்த பகுதியில் அரசு மருத்துவமனை அமைத்தால் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மருத்துவர்களை அனுப்ப தயார். பழவேற்காடு ஏரிக்கு பாதிப்பு ஏற்பட்டால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றார்.