ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
விழுப்புரம், அக்.5 விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் நா.புகழேந்தி யை ஆதரித்து வாக்கு சேகரிக்க வந்தி ருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக் குழு ஜி.ராம கிருஷ்ணன் விழுப்புரத்தில் செய்தியா ளர்களை சந்தித்தார். அப்போது, உர லுக்கு ஒரு பக்கம் இடி, மத்தாளத் திற்கோ இரு பக்கமும் இடி என்பதை போல் தமிழக மக்கள் மத்திய, மாநில அரசுகளால் இரண்டு பக்கமும் தாக்குத லுக்குள்ளாகி வருகின்றனர் என்றார். நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கிறது. 70 ஆண்டு கண்டிராத நிலை ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட் டின் உள்நாட்டு உற்பத்தி குறைந்துள் ளது. இதனால் பல லட்சம் தொழிலா ளர்கள் வேலையை இழந்துள்ளனர். கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறுகுறு தொழில்கள் முடங்கியுள்ளன. இந்த நிலையிலும் மத்திய பாஜக அரசை மாநில அரசு ஆதரிக்கிறது என்று குற்றம் சாட்டி னார்.
இத்தகைய பின்னணியில் நடை பெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தலில் திமுக மற் றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்து அதி முக, பாஜக கூட்டணிக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் வாக்கா ளர்களுக்கு வேண்டுகோள்விடுத்தார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராமகிருஷ்ணன், “ஜெர் மனியில் உள்ளது போல் தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சி வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்கிறது. ஆனால் சில அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் ஒத்துக்கொள்ளவில்லை என்றும் மக்களவைத் தேர்தலில் செலவு செய்த ரூ.10 கோடிக்கு தேர் தல் ஆணையத்திடம் கணக்கு கொடுத்து உள்ளோம், அதனை இணையத்தில் வெளியிடவுள்ளனர். இதில் ரகசியம் ஒன்றும் இல்லை என்றும் ஜி.ராம கிருஷ்ணன் தெரிவித்தார். முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராம மூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பி ரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.முத்துகுமரன், எஸ்.கீதா, ஜி.ராஜேந்திரன் ஆகியோர் உடனி ருந்தனர்.