புதுச்சேரி,டிச.17- புதுவை மாநிலத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம், அதை நிறைவேற்றுவ தற்கும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார். மத்திய குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை வடக்கு மாநில திமுக சார் பில் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில்,“மத்திய பாஜக அரசு கொண்டுவந்திருக்கும் இந்த சட்டம் மக்க ளின் வாழ்வாதாரத்தை பறிக்கின்ற ஒரு சட்டமா கும். இந்த சட்டத்தைக் கொண்டு வருவதன் மூல மாக மக்களைப் பிரித்து இந்த நாட்டில் இந்து ராஜ்யம் என்ற ஒரு சட்டத்தை நிறைவேற்ற பாஜக முயற்சிக்கிறது. புதுவை மாநிலத்திலும் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், அதை நிறைவேற்றுவதற்கும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம், ஆட்சியே போனாலும் எங்களுக்கு அதைப்பற்றி கவலை இல்லை” என்றார்.