tamilnadu

img

கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் படுதோல்வி

திருவனந்தபுரம், ஆக.25- கேரள அரசுக்கு எதிராக யுடிஎப் கொண்டுவந்த முதலாவது நம்பிக்கையில்லா தீர்மானம் படு தோல்வி அடைந்தது. நம்பிக்கை யில்லா தீர்மானத்திற்கு பதிலளித்து மூன்றே முக்கால் மணி நேரம் முதல்வர் பினராயி விஜயன் உரையாற்றினார்.  யுடிஎப்பின் பி.டி.சதீசன் எம்எல்ஏ கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 40 வாக்கு களும் எதிராக 87 வாக்குகளும் கிடைத்தன. யுடிஎப்பின் அங்கமாக இருந்த கேரள காங்கிரசின் ஜோஸ் கே மாணி கோஷ்டி ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்கட்சி உறுப் பினர்கள் கூறினர். எட்டு மணி நேரம் இந்த விவாதம்  நடந்தது. அவற்றுக்கு எல்டிஎப் தரப்பில் வலுவான பதிலடி தரப்பட்டது. அதைத் தொடர்ந்து முதல்வர் அளித்த பதில் அரசின் சாத னைகளை பட்டியலிடும் வாய்ப்பாக அமைந்தது. எதிர் கட்சியின் வெற்று வாதங்கள் ஒவ்வொன்றுக்கும் அவரது உரை பதிலடியாகவும் அமைந்தது. 

தங்க கடத்தல், லைப் மிஷன் போன்ற முக்கிய குற்றச்சாட்டு களுக்கு பதிலளிக்கத் தொடங்கி யதும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டு உரையை தடை செய்ய முயன்றனர். முழக்கமிட்டபடி அவர் கள் அவையின் மையப்பகுதிக்கு வந்தனர். ‘நான் பதிலளிக்கும்போது அதை ஏன் கேட்காமல் புறக்கணிக் கிறீர்கள் என்று கேட்டபோதும் முழக்க த்தை தொடர்ந்தனர். நம்பிக்கை யில்லா தீர்மானத்தின் பின்னணியில் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு மேடை உள் ளது’ எனவும் முதல்வர் குற்றம்சாட்டி னார். ஒவ்வொரு துறைகளிலும் நடந் துள்ள மிகச்சிறந்த சாதனைகளைக் குறிப்பிட்ட முதல்வர் மக்களுக்கு இந்த அரசுடன் உள்ள நம்பிக்கை அதி கரித்துள்ளது எனவும் தெரிவித்தார். இனி மக்களிடம் சென்று அதை காணலாம் எனவும் கூறி தனது உரை யை முதல்வர் நிறைவு செய்தார்.  

மதிப்பீட்டு அறிக்கை வெளியீடு

தேர்தல் அறிக்கையில் கூறிய வற்றை நான்கு ஆண்டுகளில் எந்த அளவுக்கு அரசு செயல்படுத்தி யுள்ளது என்பதை ஆய்வு செய்யும் மதிப்பீட்டு அறிக்கையை எல்டிஎப் அரசு சமர்ப்பித்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் சட்டமன்றத்தில் அதை வெளியிட்டார். இந்த அரசு அதிகாரத்திற்கு வந்த பிறகு ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் முந்திய ஆண்டுக்கான மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிப்பதை வழக்க மாக கொண்டுள்ளது. தேர்தல் அறிக் கையில் வழங்கிய வாக்குறுதிகள் மட்டுமல்லாது, கடந்த நான்கு (2016 மே 24 முதல் 2020 மே 23 வரை) ஆண்டுகளின் வியக்க வைக்கும் சாதனைகள் அதில் உள்ளன.