tamilnadu

img

உலக கேரள சபையின் முடிவுகளை அரசு செயல்படுத்தும்

உலக மலையாளிகளுக்கு முதல்வர் பினராயி விஜயன் உறுதி

உலக கேரள சபையின் முடிவு களை அரசு செயல்படுத்தும் என முதல்வர் பினராயி விஜயன் உறுதி ளித்தார். வெளிநாடுவாழ் மலையாளி களின் நலனுக்காக நிலைத்த திட்டங் களுடன் உலக கேரள சபை முன்னே றும் எனவும், இரண்டு ஆண்டுகளில் கேரளத்தில் உள்ளவர்களுக்கும், வெளி நாடுகளில் உள்ள மலையாளிகள் சமூ கத்திற்கும் இடையிலான உற்ற உற வாக உலக கேரள சபை மாறியுள்ளது என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

உலக கேரள சபை கூட்டத்தை துவக்கி வைத்து அவர் கூறியதாவது: உலக கேரள சபையின் செயல்பாடு களை முன்னெடுக்க 10 பேர் கொண்ட உலக கேரள சபை செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மிகச் சரியாக செயல்பட்டு வருகிறது. கேரள வளர்ச்சி நிதி, வெளிநாட்டு மலையாளிகளின் முதலீடு, பாதுகாப்பு, புனர்வாழ்வு-வருவாய் ஈட்டும் திறன், வெளிநாடுவாழ் பெண்களின் நலன், கலாச்சார பரிமாற்றம், வெளிநாடு வாழ்வோர் இந்தியாவுக்குள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து முன்மொழிவுகளை முன்வைக்க இந்த குழுவால் முடியும். முக்கி யத்துவம் மிகுந்ததாக உலக கேரள சபையின் கருத்துகளையும், தீர்மானங் களையும் கேரள அரசு பார்க்கிறது. அமைச்சர்கள், பல்வேறு துறை உயர் அதிகாரிகளின் பங்கேற்பு இதை தெளிவுபடுத்துகிறது.  உலக அளவில் வெளிநாடுவாழ் வோர் மூலம் அதிக அளவிலான பொரு ளாதாரம் ஈட்டும் நாடு இந்தியா. ஆனால், அவர்களுக்கான உதவிகளை மத்திய அரசு செய்வதில்லை. உலக கேரள சபையின் தீர்மானங்களை கேரள அரசும், உள்ளாட்சி அமைப்பு களும் செயல்படுத்தும் என முதல்வர் கூறினார். 

ராகுல்காந்தி வாழ்த்து

உலக கேரள சபை கூட்டத்தை வாழ்த்தி காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதி யுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள பினராயி விஜயன் டுவிட்டரில் அந்த கடிதத்தையும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் உலக கேரள சபை கூட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா புறக்கணித்தது உலக மலையாளிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  கூட்டத்தில் பங்கேற்ற வெளிநாடு வாழ் இந்திய தொழில்  அதிபரான யூசுப் அலி கூறுகையில், வெளிநாடுகளில் வாழும் மலையாளிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அவற்றை விவாதிக்கவும் தீர்வு காணவும் ஒரு அமைப்பு தேவை. கேரள அரசின் கீழ் செயல்படும் கேரள சபையை அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஆதரிக்க வேண்டும். எந்த அரசு வந்தாலும் உலக கேரள சபை தொடர்ந்து செயல்பட உதவ வேண்டும் என்றார்.