தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் புயல் உருவாகும் சூழலில் தமிழகம் புதுவைக்கு பலத்த மழை என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கோடை மழை பல மாவட்டஙளில் பெய்து வருகிறது. சில தென் மாவட்டங்களில் சற்று அதிகமாகவே பெய்துள்ளது.
இந்நிலையில் இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது தொடர்ந்து 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து புயலாக மாறும். அடுத்த 48 மணி நேரத்தில் அது புயலாக மாறும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த புயலுக்கு ஃபனி என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் புயல் 30ம் தேதி தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும், கரையை கடக்கும் போது தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
கேரள மற்றும் கர்நாடக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஏப்ரல் 27ம் தேதி முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப்பகுதிகளில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர், பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல்படையினருடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியி அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் புயல் உருவாகும் சூழலில் தமிழகம் புதுவைக்கு பலத்த மழை என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.