tamilnadu

img

‘பிகில்’ இசை வெளியீட்டு விழா: சாய்ராம் கல்லூரிக்கு நோட்டீஸ்

‘பிகில்’ இசை வெளியீட்டு விழா: சாய்ராம் கல்லூரிக்கு நோட்டீஸ்

சென்னை, செப்.24- பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவை நடத்த அனுமதித்தது குறித்து சாய்ராம் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க உள்ளதாக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சார்மா கூறியுள்ளார். அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கடந்த 19ஆம் தேதி நடை பெற்றது. அப்போது ஏராளமான ரசிகர்கள் திரண்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆம்புலன்சுக்கு வழிவிட வில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. விழா நடைபெறும் வளாகத்திற்குச் செல்லும் வாயிலில் நெருக்கடி ஏற்பட்டதால் காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

கல்வி நிறுவனத்தில் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது தொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், தனியார் கல்லூரியில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், ஆனால் சாய்ராம் கல்லூரி அனுமதி பெறவில்லை என்றும் தெரி வித்தார். இதுதொடர்பாக விளக்கம் கேட்டு சாய்ராம் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் அவர் கூறினார்.