சென்னை
பிரபல இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் முன்னணி நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்த "குயின்" வெப் தொடரின் (இணையம் மட்டும்) முதல் எபிசோட் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே எம்.எக்ஸ். பிளேயரில் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா இந்த வெப் தொடர் தனது அத்தையைப் பற்றியது எனக் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றமும் விளக்கம் அளிக்குமாறு கவுதம் மேனனுக்கு உத்தரவிட்டது. கவுதம் மேனன் தனது விளக்கத்தில் "நான் இயக்கிய குயின் வெப் தொடர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறே இல்லை" எனக் கூறினார். வேறு ஒரு பெண்ணின் வாழக்கை எனவும் பதிலளித்தார்.
இதனால் இந்த பிரச்சனை ஆப் ஆகிய நிலையில், பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே சனியன்று "குயின்" வெப் தொடரின் முதல் எபிசோட் வெளியானது. எம்.எக்ஸ். பிளேயரில் (MX PALYER) மட்டும் காணக்கூடிய இந்த தொடரின் முதல் காட்சியே ஜெயலலிதாவின் காலத்தை பின்பற்றியே சித்தரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் பள்ளிப் பருவம் பற்றிய காட்சிகள் விவரிக்கப்படுகின்றன. பள்ளி மாணவியாக அனிகாவும், அம்மாவாக சோனியா அகர்வாலும் நடித்துள்ளனர். இந்த தொடர் எம்.எக்ஸ். பிளேயரில் இலவசமாகக் கண்டுகளிக்கலாம்.