என்.ஜி.கே படத்தை தொடர்ந்து ஆகஸ்ட் மாத இறுதியில் சூர்யா நடித்திருக்கும் ‘காப்பான்’ படம் வெளியாகிறது. இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சூர்யாவை வைத்து மூன்றாவது முறையாக இயக்குகிறார் கே.வி. ஆனந்த்.
இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டைட்டிலை பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது ட்விட்டரில் வெளியிட்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் இந்த படத்துக்கு ‘பந்தோபஸ்த்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் வெளியிட இருக்கிறது.