அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிற நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 4-ஆம் தேதி தமிழகத்தில் அக்னி வெயில் தொடங்கியது. இதையடுத்து வெப்பத்தின் அளவு படிப்படியாக அதிகரித்தது. 17 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. திருத்தணி, வேலூர், திருச்சி, மதுரை, கரூர் உள்ளிட்ட இடங்களில் 110 டிகிரியை கடந்து அதிக அளவு வெப்பம் நீடித்தது.
கடந்த 25 நாட்களாக நீடித்து வந்த அக்னி நட்சத்திரம், இன்றுடன் முடிவடைகிற நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 4 முதல் 6 டிகிரி வரை தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என்றும், அனல் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.