tamilnadu

புதுச்சேரி ஆளுநர் அதிகார விவகாரம்: உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடையில்லை

புதுடில்லி, மே 10-புதுச்சேரி ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அண் மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனு உச்சநீதிமன்றத்தில் வெள்ளியன்று (மே 10) விசாரணைக்கு வந்தது. அப்போது கிரண்பேடி விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைகாலத்தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் இவ்வழக்கில் புதுச் சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் விளக்கமளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாதுகாப்பு அதிகரிப்புஉச்சநீதிமன்ற உத்தரவை கொண்டாடுவதற்காக புதுவை ஆளுநர் மாளிகை முன் காங்கிரஸார் பட்டாசு வெடிக்க முயன்றனர். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. காங்கிரஸார் பட்டாசுகளை வெடிக்க முயன்றபோது பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் பட்டாசுகளை பறித்ததுடன், காங்கிரஸாரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர், அவர்கள் சட்டப்பேரவை அருகே பட்டாசுகளை வெடிக்க முயன்றனர். அதற்கும் போலீஸார் அனுமதியளிக்கவில்லை. தொடர்ந்து, அங்கிருந்தும் அவர்கள் அப்புறப் படுத்தப்பட்டனர்.இதையடுத்து, ஆளுநர் மாளிகையைச் சுற்றிலும் பாதுகாப்பைப் பலப்படுத்த டி.ஜி.பி. சுந்தரி நந்தாவிடமிருந்து உத்தரவு வந்ததையடுத்து, மீண்டும் அங்கு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டன.