tamilnadu

img

லண்டனில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டம்

லண்டன் விமான நிலையத்தில், நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. 

அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு லண்டன் சென்றடைந்தார். அவருடன் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வரின் செயலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் லண்டன் சென்றுள்ளனர். இந்நிலையில், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில், புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை தமிழகத்தில் நுழையவிட்டது ஆகியவற்றை கண்டித்தும் தமிழக அரசுக்கு எதிராக பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் செய்தனர்.

இதனால், எல்லா பயணிகளும் வெளியேறிய பின், கடைசியாக அங்கு வந்த முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சரும், வேறு மாற்று வழியில் தனியாக அழைத்து செல்லப்பட்டனர்.