tamilnadu

img

சிறுமிக்கு திருமண ஏற்பாடு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

பாலியல் தொந்தரவுக்கு ஆளான 17 வயது சிறுமிக்கு, பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெறவிருப்பதாக மாவட்ட சமூக நலத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் உடனடியாக அந்த கிராமத்திற்கு சென்று மணப்பெண்ணாக இருந்த சிறுமியை அதிகாரிகள் மீட்டனர். அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டபோது, மங்கூன் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் மகன் ரஞ்சித் (25) மற்றும் கலியபெருமாள் என்பவரின் மகன் பாபு (23) ஆகிய இருவரும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தனர். இதனால் சிறுமியின் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தாக கூறி கூறியுள்ளார். 

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சமூக நலத்துறை அதிகாரிகள், இது குறித்து பாடாலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதை அடுத்து, ரஞ்சித், பாபு ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும், போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

மேலும், சிறுமிக்கும் இப்போது திருமணம் செய்யக்கூடாது, 18 வயது நிரம்பிய பிறகு தான் திருமணம் நடத்த வேண்டும் என சிறுமியின் பெற்றோரிடம் அதிகாரிகள் அறிவுரை கூறியதால், திருமணம் நிறுத்தப்பட்டது.