tamilnadu

img

கவிஞர் வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்குவது தடுப்பு

பாஜக- வகுப்புவாத சக்திகளுக்கு சிபிஎம்  கண்டனம்

சென்னை, டிச.28- கவிஞர் வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்குவதை தடுத்த பாஜக மற்றும் வகுப்புவாத சக்திகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை, எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில், கவிஞர் வைர முத்துவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கு வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விழா வில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பட்டம் வழங்குவதாக அழைப்பிதழும் வெளியி டப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக பாஜகவினரும், இந்துத்துவ மதவெறி சக்தி களும் வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்த தால் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விழாவிற்கு வராமல் ரத்து செய்துள்ளதும், இதனால் வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்குவது தடைபட்டுள்ளதும் அறிய முடிகிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.

கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவது, விருது வழங்குவது போன்ற முடிவுகளை எடுப்பதற்கு பல்கலைக்கழக கல்வி நிர் வாகங்களுக்கு உரிமையுண்டு. பல்வேறு துறைகளில் சாதித்துள்ள துறை வல்லு நர்களுக்கு அவர்கள் சாதித்துள்ள சாதனை களின் அடிப்படையில் விருதுகள் வழங்கப் படுவதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி அடிப்ப டையில் தலையிடுவது பொருத்தமான தல்ல. அத்தகைய நடைமுறைகள் அதி கரிக்குமானால் பல்கலைக்கழகங்களின் சுயாட்சித் தன்மை பாதிப்புக்குள்ளாகும். இதுமட்டுமல்லாது, கவிஞர் வைரமுத்து அவர்கள் தமிழ் இலக்கியத்தில் பல்வேறு சாதனைகளை ஆற்றியுள்ளார். திரைப்பட உலகில் பாடலாசிரியராக தனி முத்திரைப் பதித்தவர். அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் முடிவெடுத்தது பொருத்தமானதே. தனிப்பட்ட நபர் என் பதை விட தமிழ்மொழிக்கு சேவை செய்தி ருக்கிற ஒரு கவிஞர் என்கிற வகையில் அவ ரது பங்களிப்பினை கௌரவப்படுத்துவது சரியானதே.

தொடர்ந்து தமிழ்மொழிக்கு எதிராக வும், தமிழ் பண்பாட்டிற்கு எதிராகவும் செயல்பட்டு வருகிற இந்துத்துவ மதவெறி சக்திகளின் தொடர் நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் கல்வித்துறை செயல்பாடுகளில் மதச்சார்பின்மைக்கு எதி ரான சக்திகளின் தலையீடு அபாயகரமா னது என்பதையும், தமிழக ஜனநாயக சக்தி கள் இதனை அனுமதிக்கக் கூடாது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்து கிறது. இப்பின்னணியில் சென்னை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் இந்துத்துவ மதவெறி சக்திகளின் நிர்ப்பந்தத்திற்கு இரை யாகாமல் ஏற்கனவே திட்டமிட்டுள்ளபடி கவிஞர் வைரமுத்துவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.