tamilnadu

img

வெள்ளலூர் குப்பை கிடங்கு தீ விபத்து

கோவை வெள்ளலூரில், மாநகராட்சி குப்பைக் கிடங்கு சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில், நாள்தோறும் 800 மெட்ரிக் டன் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் குப்பைக் கிடங்கின் ஒரு பகுதியில், கடுமையான வெயில் காரணமாக தீ பற்றி, மளமளவென பிற பகுதிகளும் பரவி பற்றி எரிந்து வருகிறது. இதனை அடுத்து, 7 மாவட்டங்களில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.


இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் இன்று வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.