சென்னை
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த வாரம் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார். இதன்மூலம் அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான எம்ஜிஎம்-மில் அனுமதிக்கப்பட்டார். 2 நாட்களுக்கு முன்னாள் கூட எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் அறிக்கை விடுத்தன.
இந்நிலையில், எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு இன்று (வெள்ளி) வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.