தமிழகத்தில் தேர்தல் பணிகளுக்காக புதிய டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. மேலும் தேர்தல் தொடர்பான பணிகளில், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தலையிடக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக சட்டம்-ஒழுங்கு போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரை மாற்ற வேண்டும் என்று தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. அதற்கு எந்தவித நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் தேர்தல் பணிகளுக்காக புதிய டிஜிபியாக அசுடோஷ் சுக்லாவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் பிரச்சனைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளும், இனி சுக்லாவைதான் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மேலும், தேர்தல் தொடர்பான பணிகளில், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தலையிடக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.