காவிரி மேலாண்மை வாரியத்தின் புதிய தலைவராக அருண் குமார் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மத்திய அரசு அமைத்தது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட மசூத் ஹூசைன் பதவிக்காலம் கடந்த ஜூன் 30ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து காவிரி மேலாண்மை வாரிய தலைவராக அருண்குமார் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார்.