tamilnadu

img

தோனியின் வாழ்க்கை வாரலாறு படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை...

மும்பை 
தொலைக்காட்சி தொடர் மூலம் ஹிந்தி திரையுலகில் அடியெடுத்து வைத்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் பாலிவுட்டில் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியை கண்டவர். 

தொலைக்காட்சி தொடர்களில் பல்வேறு விருதுகளுடன் சாதனை படைத்த  சுஷாந்த் சிங் 2013-ஆம் ஆண்டு "காய் போ சே" என்றார் படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி வைத்தார். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகர் விருதை பெற்ற இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தது. அதுவரை சுஷாந்த் சிங்-கை ஹிந்தி திரையுலகில் மட்டும் தான் தெரியும். 2016-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான “தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி” திரைப்படத்தின் மூலம் தெற்காசியா முழுவதும் பிரபலமானார்.  

இந்திய திரையிலகில் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பாக பல படம் எடுக்கப்பட்டு இருந்தாலும் தோனியின் வாழ்க்கை வரலாறு படம் வித்தியாசமாக ஹிட் அடித்தது. அன்று முதல் இன்று வரை பாலிவுட் ஸ்டார் வரிசையில் தனி ஒருவராக கலக்கினார். நடப்பாண்டில் "தில் பெச்சாரா" என்ற படத்தில் நடத்தியிருந்தார். இந்த படம் திரைக்கு வரவில்லை.  

இந்நிலையில் சுஷாந்த் சிங் மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்பதால் போலீசார் தீவிர விசாரணையில் குதித்துள்ளனர்.  34 வயதாகும் இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் திடீர் மரணம் திரையுலக பிரபலங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.