tamilnadu

img

நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது? உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு

புதுதில்லி, நவ. 25- மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது என்பது குறித்து, செவ்வாய் காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.  இதுதொடர்பாக ஞாயிறன்று ஒத்தி வைக்கப்பட்ட வழக்கு திங்கள் காலை  10.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆளு நரின் கடிதம், எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் ஆகியவை சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, மகாராஷ்டிரா ஆளுநர் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜென ரல் துஷார் மேத்தா, தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையிலேயே பாஜகவை ஆட்சியமைக்க, முழு விருப்பத்துடன் ஆளுநர் அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்தார்.

சிவசேனா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அதிகாலை 5.17 மணிக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்ள வேண்டிய அளவிற்கு, அப்படி என்ன தேசியப் பேரிடர் ஏற்பட்டது என கேள்வி எழுப்பினார். இதன்மூலம், அனைத்தும் அதற்கு முன்பே திட்டமிடப்பட்டுவிட்டது என்பது தெரியவந்திருப்பதாகவும், கபில் சிபல் வாதிட்டார். பாஜக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, உச்சநீதி மன்றம் 24 மணி நேரத்தில் நம்பிக்கை  வாக்கெடுப்பு நடத்த ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்றார். குறைந்தபட்சம், 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட உச்சநீதி மன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா, இது போன்ற வழக்குகளில், 24 மணி நேரத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டி ருப்பதாகவும், மிகச்சில வழக்குகளில் மட்டுமே 48 மணி நேர அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ஒரே ஒருவர் பாஜக கூட்டணியில் இணைந்து கொண்டு, தாம் தான் கட்சி என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள  முடியும் என்றார். 3 கட்சி கூட்டணி நம்பிக்கை வாக்கெடுப்புத் தயாராக இருக்கும்போது, பாஜக கூட்டணி, அதை கண்டு அஞ்சுவதும் காலந்தாழ்த்துவதும் ஏன் என்றும் வினவினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதி கள் அடங்கிய அமர்வு, மகாராஷ்டிரா  சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது? என்பது குறித்து, செவ்வாய் 10.30 மணிக்கு, தீர்ப்பளிக்கப்படும் என அறிவித்திருக்கிறது.