tamilnadu

img

7 பேரை விடுவிக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை: தமிழக அரசு

சென்னை,பிப்.12- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்து உத்தரவிடும் அதிகாரம் அர சுக்கு இல்லை என்று சென்னை உயர்  நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரி வித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் சிறை யில் இருக்கும் நளினி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு புத னன்று(பிப்.12) விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்ய வில்லை என்றும், 7 பேரை விடுதலை செய்ய அமைச்சரவை தீர்மானம் நிறை வேற்றிய பிறகும் நியாயமற்ற முறையி லும், சட்டவிரோதமாகவும் சிறையில் அடைத்துள்ளதால் இந்த மனு விசார ணைக்கு உகந்ததுதான் என்றும் நளினி  தரப்பில் வாதிடப்பட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அமைச்  சரவையின் ஆலோசனைக்கு ஆளு நர் கட்டுப்பட வேண்டும், ஆளுநர் கையெ ழுத்து கூட போட தேவையில்லை என்  றும் நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பில், உச்சநீதி மன்ற தீர்ப்பை தொடர்ந்து நளினி உட் பட 7 பேரின் விடுதலை தொடர்பாக 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது என்றும், அதுதொடர்பாக எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆளுநருக்கு அனுப்பிய தீர்மா னம் என்பது வெறும் பரிந்துரை மட் டுமே, ஆளுநருக்கு எந்த உத்தரவை யும் பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறப்பட்டது. இதைக்கேட்ட உயர்நீதிமன்றம், நளினி சட்டப்பூர்வமாக சிறையில் இருக்  கிறாரா? அல்லது சட்டவிரோதமாக சிறையில் இருக்கிறாரா? என்பது குறித்து அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெளிவுபடுத்த வேண்டும்  என்று உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கு மீதான அடுத்தகட்ட விசார ணையை 18ஆம் தேதிக்கு உயர்நீதி மன்றம் ஒத்திவைத்தது.