சென்னை,ஏப். 16- ஊரடங்கு நடைமுறையின் பொழுது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் - அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது சம்பந்தமாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
தினசரி காலை ?7 மணி முதல் பகல் 12. 30 வரை ஆவணங்கள் சரிபார்க்கப் பட்டு 30 நிமிடத்திற்கு ஒருமுறை 10 நபர்களுக்கு என வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும். இத்தருணத்தில் சமூக இடைவேளி அவ சியம் கடைப்பிடிக்க வேண்டும். பறிமுதல் செய் யப்பட்ட வாகனங்கள் அந்தந்த காவல் நிலை யத்திற்குட்பட்ட பகுதியில் வழங்கப்படும்.
24-03-2020 அன்று முதல் எஃப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்யப்பட்ட வரிசைப்படி வாகன உரிமையாளர்க ளுக்கு எந்த இடத்தில் வந்து வாகனங்களை பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற தகவல் அனுப்பி வைக்கப்படும். அந்த நபர்கள் நேரில் வந்தவுடன் ஆவ ணங்கள் சரிபார்க்கப்பட்டு வாகனங்கள் அவர்கள் வசம் ஒப்படைக்கப்படும். வாகன உரி மையாளர்கள் தங்களது ஓட்டுனர் உரிமம், வாகனத்தின் ஆர்.சி.புத்தகம் அசல் மற்றும் ஜெராக்ஸ் அவர்களை அவசியம் கொண்டு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.