சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்க பொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிராக 66 காவல் அதிகாரிகள் தொடர்ந்திருந்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஜி பொன் மாணிக்கவேலை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்திருந்தது.
இந்நிலையில், முன்னாள் காவல் அதிகாரிகள் 66 பேர் பொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.