தில்லி
பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் குறுகிய காலத்தில் புதிய உச்சத்தை தொட்டவர். தோனியின் ரோல்மாடலாக நடித்துள்ளதால் தமிழ்நாட்டில் இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
கடந்த ஜூன் 14-ஆம் தேதி மும்பையில் தனது வீட்டில் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரது குடும்பத்தினர் இது கொலை என போலீசாரிடம் கூறினர். போலீசாரும் வழக்குப்பதிவு செய்து தனிப்படையுடன் விசாரித்து வந்தனர். ஆனால் எந்த தடயமும் கிடைக்கவில்லை. மேலும் சுஷாந்த் சிங்கின் குடும்பத்தினர் ரியா சக்ரபர்த்தி (சுஷாந்தின் தோழி) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், சிபிஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். சிபிஐ விசாரணை தேவையில்லை என மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டது. சுஷாந்த் பீஹார் மாநிலத்தவர் என்பதால் அம்மாநில அரசு சிபிஐ-க்கு விசாரணைக்கு ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கில் தொடர்புடைய அனைத்து ஆதாரங்களையும் மும்பை காவல்துறை, சிபிஐ தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.