tamilnadu

img

அயோத்தி தீர்ப்பு நாட்டின் பன்முகத் தன்மையில் அரிமானத்தை ஏற்படுத்தும்: தமுஎகச

மக்கள் ஒற்றுமை மேடை வேதனை!

சென்னை, நவ. 13- அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு  வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு  ஒரு சாராருக்கு அநீதி இழைக்கப்பட்டி ருக்கிறது என்று மக்கள் ஒற்றுமை மேடை  தனது வேதனையை வெளிப்படுத்தி யிருக்கிறது. இதுகுறித்து தமிழக மக்கள்  ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பா ளர்கள் பேரா. அருணன் மற்றும் க.உதய குமார் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- அயோத்தியில் பாபர் மசூதி இருந்த  இடம் தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு திருப்திகர மானதாக இல்லை. அது சுயமுரண்களைக் கொண்டதாக இருக்கிறது. மத நம்பிக்கை யின் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க முடியாது என்று ஒருபுறம் சொல்லிக்  கொண்டே, மறுபுறம் ராமர் அங்குதான் பிறந்தார் எனும் நம்பிக்கையின் அடிப்படை யில் தீர்ப்பு தரப்பட்டுள்ளது. 

1992இல் பாபர் மசூதியை இடித்தது சட்ட விரோதம் என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டே, மறுபுறம் அதே இடத்தை இடித்த வர்களின் கோரிக்கையாம் ராமர் கோயில்  கட்டுமானத்திற்குத்தந்துள்ளது! ஆச்சரிய மும் அதிர்ச்சியும் தரும் விஷயம். அங்கே  பாபர் மசூதி 450 ஆண்டுகளாக இருந்தது  எனும் பௌதிக மற்றும் சரித்திர உண் மையை அது கணக்கில் கொள்ளாதது. சொத்து தகராறில் அனுபவ பாத்தியம்  என்பதை எவரும் கவனத்தில் கொள்வார் கள். இந்த மசூதி விஷயத்தில் ஓராண்டல்ல, ஈராண்டல்ல 450 ஆண்டுகள் அனுபவ பாத்தி யத்தை முஸ்லிம்களுக்கு இருந்தது, 1949இல்  தான் அங்கே திடீரென்று பால ராமர் விக்ர கம் தோன்றியது. அதுவும் சட்ட விரோதமே  என்பதை உச்சநீதிமன்றமும் கோடிட்டுக் காட்டியுள்ளது. அப்படியெனில் முஸ்லிம்க ளின் அனுபவ பாத்தியத்தை அண்மைக் காலம் வரை தொடர்ந்துள்ளது. அப்படிப் பட்டவர்களுக்கு அந்த இடத்தில் எந்த உரிமை யும் இல்லை எனத் தீர்ப்புத் தருவதில் என்ன  நீதி இருக்க முடியும்?

தாவாவுக்குட்பட்ட இடத்தில் அல்லாது வேறு எங்கோ ஐந்து ஏக்கர் இடம் தர வேண்டும் எனச் சொல்வது இயற்கை நீதிக்கு  முரணானது. வழக்கு குறிப்பிட்ட இடம் யாருக்குச் சொந்தம் என்பதுதான். அது ஒரு  தரப்புக்கே சொந்தம் என்றால் எதற்கு இன்  னொரு தரப்பிற்கு ஐந்து ஏக்கர் இடம் தர  வேண்டும்? அதிலிருந்தே அந்த இன்னொரு  தரப்பிற்கு அந்த இடத்தில் உரிமை உண்டு  என்பது உறுதியாகிப் போகிறது. அந்த உரிமையை நிலை நாட்டாதது நீதியைப் புறக்கணித்ததாகிப் போகிறது. இத்தகைய தீர்ப்பு இது போன்ற வழக்கு களுக்கு மோசமான முன்னுதாரணமாகும் மேலும் ஆபத்தையும் கொண்டுள்ளது. ஆர்எஸ்எஸ் பரிவாரம் பாபர் மசூதியோடு நிற்கப் போவதில்லை. அதன் நிகழ்ச்சி நிரலில்  காசி, மதுரா போன்ற ஊர்களில் உள்ள மசூதிகளும் உள்ளன. பாபர் மசூதியை இடித்த உடனேயே ‘அடுத்த இலக்கு காசி,  மதுராவே’ என்று அவர்கள் முழக்கமிட்டதை மறந்துவிட முடியாது.

தனது  தீர்ப்பு நல்லிணக்கத்திற்கும் அமை திக்கும் வழி வகுக்க வேண்டும் என்று நீதி மன்றம் கூறியிருப்பது சரியே. ஆனால் தீர்ப்பு  ஒரு சாராருக்கு அநீதி இழைப்பதாக இருந்  தால் அது அந்த நோக்கத்தை எட்டாது. உண்மையான நீதியே நிலையான அமைதி யையும், வலுவான மக்கள் ஒற்றுமையை யும் கொண்டுவரும். தற்போதைய தீர்ப்பு அப்படியாக இல்லை. இது முஸ்லிம் தரப்  பிற்கு நியாயம் வழங்கவில்லை என்பதை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வேதனை யோடு சுட்டிக் காட்டுகிறது. முஸ்லிம்கள் மட்டுமல்லாது  ஜனநாயகச் சிந்தனை கொண்ட இந்துக்களும் தீர்ப்பை விமர்சித்திருக்கிறார்கள் என்பதை மேடை எடுத்துக்காட்டுகிறது. மெய்யான நீதிக்கான மதம் கடந்த தாகம் மக்கள் ஒற்றுமையை உறுதி செய்யும், அது சிறுபான்மையோர் நலனைக் காத்து நிற்கும் எனும் நம்பிக்கை மேடைக்கு இருக்கிறது. இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.