tamilnadu

img

சாத்தான்குளம் : உச்சநீதிமன்ற பரிந்துரையை செயல்படுத்த கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சாத்தான்குளம், ஜூலை 7- சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவல்நிலைய சித்ரவதையை தடுப்பதற்கு உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள பரிந்துரைகளை நிறைவேற்ற தமிழக அரசு மறுக்கிறது. காவல்துறையினர் மீதான புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்ற பரிந்துரை  ஆகும். ஆனால் மாநில அரசு அதிகாரிகளை கொண்டு  போலீஸ் சீர்திருத்த குழு அமைக்கிறது, இது பொருத்தமான தல்ல, எனவே ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்டு குழு அமைக்கப்பட வேண்டும். சாத்தான்குளம் இரட்டைக் கொலை என்பது தனித்த நிகழ்வல்ல. மாநிலம் முழுவதும் நடந்து  வரும் காவல்துறை அத்துமீறல், அட்டூழியத்தின் ஒரு பகுதியே ஆகும். எனவே இதைத் தடுப்பதற்கான உச்சநீதிமன்ற பரிந்துரைகளை செயல்படுத்த மாநில அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்  என்று குறிப்பிட்டார்.