tamilnadu

img

திருமுருகன் காந்தி மீது பொய் வழக்கு: அனைத்துக் கட்சி கூட்டம் கண்டனம்

சென்னை,டிச.16- திருமுருகன் காந்தி உள்ளிட்ட சமூக ஜனநாயக இயக்கங்களின் மீது பொய்வழக்கு பதிவு செய்  வதை எதிர்த்து சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் திங்க ளன்று(டிச.16) நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, சிபிஐ மாநிலச் செயலாளர் முத்த ரசன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு  உறுப்பினர் ஆறுமுக நயினார்,  மதிமுக துணை பொதுச்செய லாளர் மல்லை இ.சத்யா, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநிலத் தலைவர் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர்  ஜவாஹிருல்லா மே 17 இயக் கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு முருகன் காந்தி, கலி பூங்குன் றன்,கொளத்தூர் மணி,நெல்லை முபாரக் உள்ளிட்ட பல்வேறு அர சியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். மே பதினேழு இயக்க ஒருங்கி ணைப்பாளர் திருமுருகன் காந்தி  மீதான தமிழக அரசின் அடக்கு முறைகள் குறித்து விவாதித்து, அதனை எதிர்கொள்ளும் வழி முறைகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோ சிக்கப்பட்டது.

திருமுருகன் காந்தி மீது 40-க்கும் மேற்பட்ட பொய் வழக்குகள் போடப்பட்டிருக்கிறது. அவர் கலந்துகொண்டு பேசிய அனைத்து கூட்டங்கள், அனுமதி  பெற்று நடத்திய ஆர்ப்பாட்டங்கள் என அனைத்திற்கும் வழக்குகள் போடப்பட்டுள்ளன. தற்போது அந்த வழக்குகளை எல்லாம் சிபி சிஐடி விசாரணைக்கு தமிழக அரசு மாற்றியிருக்கிறது. அரசி யல் ரீதியாக ஜனநாயகப் போராட் டங்களை நடத்தியதற்காக ஒரு வர் மீது சிபிசிஐடி விசாரணை என்பது மோசமான அணுகு முறையாகும். மக்களின் உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் திரு முருகன் காந்தியையும், அவர்  சார்ந்திருக்கும் மே பதினேழு  இயக்கத்தினையும் முடக்குவ தற்கான வேலையை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செய்து கொண்டிருக்கிறது. மத்திய அரசுடன் சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டில் முன்  னெப்போதும் இல்லாத வகை யில் மிகப்பெரும் அடக்கு முறையை தமிழக அரசு செய்து  கொண்டிருக்கிறது. போராடும் அனைவரின் மீதும் இப்படிப்பட்ட  பொய் வழக்குகள் தொடர்ச்சி யாக ஏவப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

திருமுருகன் காந்தி தனிமனித ரல்ல. அவரோடு தமிழ்நாட்டின்  பிரதான அரசியல் கட்சிகளாக வும், இயக்கங்களாகவும் இருக்கிற நாங்கள் அனைவரும் இருக்கிறோம் என்பதை இந்த  அரசுக்கு தெரியப்படுத்துவ தற்காக இந்த கூட்டத்தினை நடத்துகிறோம். திருமுருகன் காந்தி மீதான  அனைத்து பொய் வழக்குகளை யும் திரும்பப் பெற வலியுறுத்தி, சட்டமன்றக் கூட்டத்தொடர் துவங்கும் ஜனவரி மாதம் முதல்  வாரத்தில் ஜனநாயக ரீதியான எதிர்ப்பினை பதிவு செய்யும் போராட்டம் நடத்துவது என்றும்  இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.