கன்னியாகுமரியில் 45 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலின்போது கன்னியாகுமரியில் உள்ள 47 கடலோரகிராமங்களைச் சேர்ந்த 45 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் சுமார் 45 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டது. ஏன் என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.