tamilnadu

img

சென்னை உயர்நீதிமன்ற வாயில்கள் மூடல்

சென்னை,நவ.9- சென்னை உயர்நீதிமன்றத் தின் அனைத்து கதவுகளும் சனிக்கிழமையன்று  இரவு 8 மணியில் இருந்து ஞாயிற்றுக் கிழமை இரவு 8 மணி வரை ஒருநாள் முழுவதும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 150 ஆண்டுகள் பழமையான சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தினமும் ஏராளமான வழக்கறி ஞர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். உயர்நீதிமன்றம் என்பது பொதுமக்களுக்கான பொது இடம் அல்ல, அரசு சொத்து என்பதை நினைவு படுத்தி, யாரும் உரிமை கொண் டாட முடியாது என்பதை உறுதி செய்யும் விதமாக ஆண்டுக்கு ஒருநாள் உயர்நீதிமன்ற வளா கத்தின் கதவுகள் அனைத்தும் மூடப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் ஒரு நாள் சென்னை உயர்நீதி மன்றத்தின் வாயில்கள் மூடப்படும். அதன்படி, உயர் நீதி மன்றத்தின் ஏழு வாயில்களும் நவம்பர் 9 ஆம் தேதி சனிக்கிழ மையன்று இரவு 8 மணி முதல் ஞாயிறு இரவு 8 மணி வரை மூடப்படும் என்று உயர் நீதிமன்ற நிர்வாகப் பதிவாளர் அறிவித்துள்ளார்.