tamilnadu

img

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றம்

சென்னை, செப். 2- சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை  நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலை யில், புதிய தலைமை நீதிபதியாக தஹில் ரமணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் அதற்கு முன்னர் மகாராஷ்டிரா உயர் நீதிமன்ற த்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்துவந்தார். இந்த நிலையில் சென்னை உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வரும் தஹில் ரமணியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற கொலிஜியம் குழு முடிவெடுத்துள்ளதாக தி டெலிகிராஃப் இந்தியா செய்தி நிறுவனம் தகவல் வெளி யிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலிஜியம் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத் தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விரைவில் வெளி யிடப்படவுள்ள நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக மூத்த நீதிபதிகள் மற்றும் மிகப்பெரிய நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பில் உள்ளவர்கள், அதைவிட சிறிய நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப் படுவதில்லை. ஆனால், 75 நீதிபதிகள் பலத்து டன் இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய, அதேநேரம் மிகவும் பழைமைவாய்ந்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஒருவரை, இந்தியா வின் மிகச்சிறிய உயர் நீதிமன்றமான மேகா லயாவுக்கு மாற்றுவது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. ஏனெனில் மேகாலயாவில் தற்போதைய நீதிபதிகளின் எண்ணிக்கை மூன்று மட்டுமே. தஹில் ரமணி மாற்றப்படு வதற்கான காரணத்தையும் கொலிஜியம் ரகசியமாகவே வைத்துள்ளதாக டெலி கிராஃப் செய்தி கூறுகிறது.

இந்தியாவின் மிக மூத்த நீதிபதிகளில் ஒருவர் தஹில் ரமணி. தற்போது நாட்டிலு ள்ள இரண்டு உயர் நீதிமன்றப் பெண் தலை மை நீதிபதிகளில் இவரும் ஒருவர். மற்றொரு வர் ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள கீதா மிட்டல். தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகள் 2,57,234, கிரிமினல் வழக்கு கள் 40,774, புதிதாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 1,04,847 என மொத்தமாக 4,02,855 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், மேகாலயா உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகள் 393, கிரிமினல் வழக்குகள் 73, புதிய மனுக்கள் 570 என வெறும் 1,036 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.