tamilnadu

img

4,250 எம்பிபிஎஸ் மாணவர்களின் சேர்க்கையை மறு ஆய்வு செய்ய உத்தரவு

சென்னை,அக்.16- நடப்பாண்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 4250 மாணவர்களின் சேர்க்கையை மறு ஆய்வு செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக சி.பி.ஐ விசாரிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.  தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள 207 இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்ப அர சுக்கு உத்தரவிடக் கோரி கோவையைச் சேர்ந்த தீரன் என்பவர் தொடர்ந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது ஆள்மாறா ட்டம் தொடர்பான சி.பி.சி.ஐ.டி. விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் புதனன்று நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு முன் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்த அறிக்கையில் ,இந்தியா முழுவதும் 38,000 மருத்துவக் கல்வி இடங்களுக்காக 14 லட்சம் பேர் நீட்தேர்வு எழுதியதாகவும், தமிழகத்தில் 4,250 பேர் நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாகவும் இது வரை நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட தாக 4 மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள் ளது. தமிழகத்தில் 4,250 மாணவர்களின் கைரேகையை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமையிடம் கோரப்பட்டுள்ளதாக வும், இதுவரை 19 மாணவர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அவர்கள் தேர்வு எழுதியபோது பதியப்பட்ட கைரேகைகளை யும் தற்போது கல்லூரியில் சேர்ந்தபின் மாண வரின் கை ரேகையும் ஒத்துப் போகிறதா என ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.

 மாணவர்களின் ஆடை, தலைமுடி, கழுத்து வரை சோதனை செய்த அதிகாரி கள், முகத்தை சோதனை செய்யாமல் விட்டு விட்டதாகத் தெரிவித்த நீதிபதிகள் , கைரேகை மட்டுமன்றி, முகத்தையும் பதிவு செய்யும் வகையில் கருவிகளை பொருத்துமாறும் பெற்றோர்களின் பேராசையே இது போன்ற தொரு விளைவை மாணவர்களுக்கு ஏற்படுத் துவதாகவும், தொடர்புடைய மாணவர்களின் நலன் கருதி அவர்களது புகைப்படங்களை  பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வெளி யிடக் கூடாது என்றும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கவும் அறிவுறுத்தினர். மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 4,250 மாணவர்களின் கைரேகைப் பதிவை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்க தேசிய தேர்வு முகமைக்கும் அந்த 4,250 மாணவர்களின் சேர்க்கையை மறு ஆய்வு செய்ய வேண் டும் என்று தமிழக அரசுக்கும் நீதிபதிகள் உத்தர விட்டனர். மற்ற மாநிலங்களிலும் ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளதால் வழக்கில் சி.பி.ஐ.யை எதிர்மனுதாரராக நீதிபதிகள் சேர்த்தனர். எதிர்காலத்தில் நியாயமான முறையில் நீட்  தேர்வு நடத்த எடுக்கப்போகும் நடவடிக்கை கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதி லளிக்கவும் உத்தரவிட்டனர்.

வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிய உத்தரவு 

ஆள்மாறாட்ட விவகாரத்தால் ஆதிதிரா விடர் பழங்குடியின மாணவர்களின் மருத்து வக் கல்வி இடங்கள் பறிபோய் இருக்கும் பட்சத்தில், ஆள்மாறாட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  தமிழ்நாட்டில் உள்ள நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் தங்கள் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டு ள்ளனரா என பதில் அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசும் இது தொடர்பாக விசார ணைக் குழு அமைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின்  விசாரணையை வருகின்ற 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.