முதுமலை புலிகள் காப்பகத்தில் (எம்.டி.ஆர்) இன்று காலை 50 வயதான பழங்குடி பெண் ஒருவர் புலிகள் தாக்கியதால் உயிரிழந்தார்.இவர் புலிகள் காப்பகத்தின் இடையக மண்டலத்தில் உள்ள குரும்பர்பாடியில் அவரது கணவர் மாதனுடன் வசித்து வந்தார்.இந்நிலையில் புலிகள் தாக்கியதால் பெண் உயிரிழந்தது மிகவும் வருத்தத்தை அளித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும், தாக்குதலுக்கான காரணம் குறித்து வனத்துறை விசாரித்து வருவதாகவும் எம்.டி.ஆரின் துணை இயக்குநர்ஸ்ரீகாந்த் தெரிவித்தார். இந்த சம்பவம் மனிதர்கள் வசிக்கும் இடத்திற்க்கு அருகில் நடக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்த நிலையில் ,இந்நிகழ்வு சிங்காரா வன எல்லையில் உள்ள கல்லல்லாவில் உள்ள ஒரு ரிசர்வ் காட்டுக்குள் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக எம்.டி.ஆரின் துணை இயக்குநர்ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
2016 க்குப் பிறகு நீலகிரியில் புலிகள் தாக்கியதால் ஏற்பட்ட முதல் மனித இறப்பு இதுவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.