tamilnadu

img

ஐ.எஸ். தீவிரவாதிகள் - பாதுகாப்பு படை இடையே துப்பாக்கி சூடு - 15 பேர் பலி

இலங்கையில் நேற்று இரவு ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப்படையினர் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் பலியாகி உள்ளனர்.

 இலங்கையின் அம்பாறை - கல்முனையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் - பாதுகாப்பு படை இடையே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலியாகியுள்ளனர். 6 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 6 சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாக இலங்கை காவல் துறையினர் தெரிவித்துள்ளது. இந்நிலையில் 15 பேர் கொல்லப்பட்ட வீட்டில் ஆயுதங்கள், வெடிமருந்து சிக்கின. தற்கொலை தாக்குதலுக்கு முன்பு ஐ.எஸ். தீவிரவாதிகள் சபதம் ஏற்ற வீடியோ காட்சியும் சிக்கி உள்ளது. ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன