tamilnadu

img

இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு

இலங்கையில் இன்று மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு பாதுகாப்பான முறையில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் கடந்த ஞாயிறன்று நடந்து கொண்டிருந்தபோது, தேவாலயங்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன. அடுத்தடுத்து நடந்த இந்த குண்டு வெடிப்புகளால் இலங்கையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் பெண்கள், 

இந்நிலையில் திங்களன்று வாகனத்தில் இருந்த வெடிபொருளை கண்டறிந்து அவற்றை செயலிழக்கச் செய்ய முயன்ற போது எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. நல்வாய்ப்பாக இந்த வெடிவிபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 10 இந்தியர்கள் 39 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து இலங்கை முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 


வாகன தணிக்கைகள் குறிப்பாக சந்தேகத்துக்கிடமான வாகனங்களை காவல்துறையினர் தணிக்கை செய்தனர். தலைநகர் கொழும்பு நகரிலுள்ள வெல்லவட்டா என்ற பகுதியில், சவாய் என்ற திரையரங்கு உள்ளது. அதன் முன்பாக சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிள் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதனை சோதித்தபோது, சீட்டுக்கு அடியில் வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை பத்திரமாக மீட்டு சென்று வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் முயற்சியில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டனர். அது முடியாததால் வெடிகுண்டை வெடிக்க வைத்தனர். முன்னெச்சரிக்கையோடு, பாதுகாப்பாக இதை செய்ததால், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று ருவான் விஜேவர்தனே தெரிவித்துள்ளார். 


 இந்த குண்டு வெடிப்புடன் சேர்த்தால், இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இதுவரை 10 இடங்களில் குண்டுகள் வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து இலங்கையில் பதற்றமான சூழல் நிலவுவால் கூடுதலாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டைகள் நடந்து வருகின்றன. குறிப்பாக வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தொடர்குண்டு வெடிப்புக்குத் தலைமை தாங்கி நடத்திய பயங்கரவாதியும் தற்கொலைப்படைத்தாக்குதலில் பலியாகி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவான் விஜேவர்ததேன தெரிவித்துள்ளார்.