tamilnadu

img

வசந்தா முருகு கல்லூரியில் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

தரங்கம்பாடி, மே 8-நாகப்பட்டினம் மாவட்டம் திருவிளையாட்டம் அருகேயுள்ள ஈச்சங்குடி வசந்தா முருகு பாலிடெக்னிக் கல்லூரியில் 2016-19 ஆண்டு பயின்ற 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி புதனன்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது.கல்லூரியின் சிறப்பு அலுவலர் பொறியாளர் கண்ணன் வரவேற்புரையாற்றினார். ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநரும், தொழிலதிபருமான பாலாஜிபாபு, காரைக்கால் மாவட்ட உதவி ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பொறியாளர் ரவிக்குமார், கார்த்திக், வடிவேலு,ஆசிரியர் பாலமுருகு ஆகியோர் உரையாற்றினர். மூன்றாமாண்டு நிறைவு செய்யும் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள நிறுவனங்களில் பணியாற்ற நியமன ஆணைகளை சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர். மாணவர்கள் பெற் றோர்களுடன் வந்து ஆணைகளை பெற்று சென்றனர். கல்லூரி முதல்வர் மணிகண்டன் நன்றி கூறினார்.