tamilnadu

ஒலிம்பியாட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

சென்னை, ஜூன் 19 கல்லூரி மாணவர்க ளுக்காக நடை பெரும் உலகின் மிக பெரிய தனி நபர் நிதி ஒலிம்பியாட் தேர்வு களை முன்னாள் ஐஐஎம் மாணவர் குழு வருடாவரு டம் நடத்தி வருகிறது. இந்த வருடம் 6வது ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னை யில் நடைபெற்றது. இளை ஞர்களிடையே தனி நபர் நிதி பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு உருவாக்குவ தற்காக இந்த தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 400க்கும் அதிகமான கல்லூரிகளில் இருந்து 30000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்றனர். இந்த ஆண்டு ஒலிம்பியாட் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு மணி விஸார்ட் நிறுவனஇணை நிறுவனர் வெங்கடேஷ் வரதாச்சாரி, ஐஐடி பேராசிரியர் தில்லை ராஜன்,   ஐதாட் நிறுவனர் ஷ்யாம் சேகர் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.