tamilnadu

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது    

சிவகங்கை.அக்.12- சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கௌரிபட்டியை சேர்ந்த கண்ணப்பன் என்ற முதியவர் ரூ.10 ஆயிரம் பணம் எடுத்து பணத்தை சரி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அருகே உட்கார்ந்திருந்து நோட்டமிட்ட முதியவர் பழனிச்சாமி அந்த பணத்தை திருடிச் சென்று விட்டார் .  இதுகுறித்து கண்ணப்பன் தனது மகன் மணி முத்துவுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து வங்கி சிசிடிவி கேமிராவில் பார்த்துள்ளனர். அப்போது பழனிச்சாமி என்ற முதியவர் பணத்தை திருடிச் சென்றது தெளிவாக தெரியவந்தது. இதையடுத்து தன் நண்பனின் உதவியோடு காவல்துறைக்கு தகவல் கொடுத்தார் . இதையடுத்து பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பழனிச்சாமியை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.