தாராபுரம், நவ. 6- பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி தாராபுரம் கோட்டப்பொறியாளர் அலுவ லகம் முன்பு புதனன்று சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலைப்பணியாளர்கள் சாலை பராமரிப்பு பணியை மேற்கொள்ள மண்வெட்டி, பிக் காக்கஸ், கைவண்டி, அரிவாள் உள்ளிட்ட தளவாடங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் பொது வருங் கால வைப்புநிதி கணக்கிற்கென பிடித்தம் செய்யப்பட்ட மாதாந் திர சந்தா மற்றும் கடன் தொகை யினை உரிய கணக்கில் சேர்க்க வேண்டும். சாலைப்பணியாளர் களை ஒப்பந்தப்பணி மற்றும் மாற் றுப்பணிக்கு பயன்படுத்துவதை கைவிட்டு சாலைபராமரிப்பு பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தாராபுரம் கோட்டத் தில் சாலைப்பணியாளர்களில் தகுதியுள்ளவர்களுக்கு சாலை ஆய்வாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பப உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப்பணியா ளர்கள் சங்கம் சார்பில் தாராபுரம் கோட்டப்பொறியாளர் அலுவல கம் முன்பு புதனன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் கோட்டத்தலைவர் கே.வெங்கிடு சாமி தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் எல்.தில்லையப்பன் கோரிக்கைகளை விளக்கி பேசி னார். கோட்ட துணை தலைவர் கள் சி.மாரிமுத்து, வி.தங்கவேல், கோட்ட இணை செயலாளர்கள் என்.சிவக்குமார், மணிமொழி முன்னிலை வகித்தனர். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் பி.ரீட்டா வாழ்த்தி பேசினார். மாநில தலை வர் மா.பாலசுப்பிரமணியன், மாநில பொருளாளர் இரா.தமிழ், பொதுச்செயலாளர் ஆ.அம்சராஜ், மாநில துணை தலைவர் வே.கணே சன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். இதில் திரளான சாலைப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.