tamilnadu

img

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக விவாதிக்க பேரவையில் அனுமதி மறுப்பு

சென்னை,பிப்.17- சிஏஏவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் விவாதம் நடத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வைத்த கோரிக்கையை பேர வைத் தலைவர் நிராகரித்தார். தமிழக சட்டப்பேரவையில் திங்க ளன்று(பிப்.17) கேள்வி நேரம் முடிந்த தும் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திருத்தப்பட்ட குடியுரிமை  சட்டத்திற்கு (சிஏஏ) திரும்பப் பெற  தீர்மானம் கொண்டு வரவேண்டும் என ஏற்கெனவே தங்களின் கவ னத்துக்கொண்டு வந்துள்ளேன். அப்போது இந்த பிரச்சனை ஆய்வில் இருக்கிறது என்று சொன்னீர்கள். எனவே, மற்ற மாநிலங்களைபோல் இந்த கூட்டத் தொடரிலாவது தீர்மா னம் நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

இதற்கு விளக்கம் அளித்த பேர வைத் தலைவர் ப.தனபால்,“ சட்டப்  பேரவை விதி 173(உ) படி, முந்தைய  கூட்டத்தொடரில் கொடுத்த தீர்மா னத்தை அடுத்த கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது. எனவே, கடந்த கூட்டத்  தொடரில் திமுக கொடுத்த தீர்மா னத்தை தற்போது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடியாது” என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர் ஆஸ்டின், “பேரவையில் விவாதம் நடத்தியிருந்தால்தான் இது பொருந்தும்” என்றார். எதிர்க் கட்சித் துணைத் தலைவர்  துரைமுருகன் குறுக்கிட்டு பேசுகை யில், “ ஒரு பொருள் குறித்து முந்தைய  கூட்டத்தில் எதிர்க் கட்சிக்கு அனுமதி கொடுத்து விவாதம் நடந்து, அதற்கு ஆளும் கட்சித் தரப்பில் விளக்கம் கொடுத்தால் மட்டுமே பேரவைத் தலைவர் சொல்லும் விதி பொருந்தும்” என்றார். இதற்கு விளக்கம் அளித்த பேர வைத் தலைவர்,“ திமுக எழுப்பிய விவகாரம் குறித்து ஆய்வு செய்து அதன் முடிவை எதிர்க் கட்சி தலை வரின் உதவியாளரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. எனவே, அந்த தீர்மானம் குறித்து பேச எந்த கட்சி யையும் அனுமதிக்க முடியாது” என்றார்.