tamilnadu

புதுச்சேரிக்கு தனி தேர்வாணையம் அமைக்க வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்

புதுச்சேரி, ஜூலை 11- அரசு கல்லூரிகளில் காலியாக  உள்ள பேராசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று  புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புதுச்சேரி  பிரதேசச் செயலா ளர் ஆர்.ராஜங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் அரசுக்கு சொந்த மான 8 கலை - அறிவியல் கல்லூரி களும், 3 பட்டமேற்படிப்பு மையங்க ளும் உள்ளது. தற்போது 150க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுடன் 28 பாடப் பிரிவுகளில்  சுமார் 14 ஆயி ரம் மாணவர்கள் படிக்கும் நிலை உள்ளது. இதனால் அவர்களின் உயர்  கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. பேராசிரியர் பணியிடங்க ளுக்காக  கடந்த 2018-19ஆம் கல்வி யாண்டில் புதுச்சேரியை சேர்ந்த 60 உதவிப் பேராசிரியர்கள் தகுதி அடிப்படையில் மிகச் சொற்ப (ரூபாய் 10 ஆயிரம்) ஊதியத்திற்கு கௌரவப் பேராசிரியராக நிய மனம் செய்யப்பட்டனர். தற்போது திடீர் என இந்த ஒப்பந்த பேராசிரி யர்களும் எந்தவித முன் அறிவிப்பு மின்றி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள னர். எனவே மாணவர்களின் நலனை  கருத்தில் கொண்டு பணி நீக்கம்  செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர்க ளுக்கு கருணை அடிப்படையில் மீண்டும் பணி வழங்குவதோடு நியாய மான ஊதியம் நிர்ணயம் செய்திட வும், நிலுவையில் உள்ள நான்கு மாத ஊதியத்தை உடனே வழங்க வும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரிக்கு தனித்தேர்வு ஆணையம் கடந்த ஆண்டு அரசு  கல்லூரிகளுக்கு மத்திய தேர்வாணை யம் மூலம் 102 பேராசிரியர்கள் நிய மனம் செய்யப்பட்டனர். இவர்க ளில் 2 பேராசிரியர்கள் மட்டுமே  புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள்  மற்ற அனைவரும் தமிழ் மொழியே தெரியாத வடமாநிலத்தைச் சேர்ந்த வர்கள் இதன் மூலம் புதுச்சேரி இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய 100 பணியிடங்கள் ஆட்சி யாளர்களின் மோசமான நடவடிக்கை யால் பறிபோயுள்ளது. இதற்கு மத்திய தேர்வாணையத்தை கார ணம் காட்டியது மிகப்பெரிய மோசடி யாகும்.  புதுச்சேரி மாநிலத்தில் பேராசிரி யர் பணிக்கு தகுதி வாய்ந்த முனை வர் பட்டம் பெற்ற 600க்கும் மேற்பட்ட வர்கள் உள்ளனர். புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு அரசு கல்லூரி களில் பணி வழங்க மறுக்கப்படு கிறது. ஆகவே புதுச்சேரி அரசு  புதுச்சேரிக்கு என்று தனி தேர்வாணை யம் ஏற்படுத்த வேண்டும் அதுவரை புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு பேராசிரியர் உள்ளிட்ட பணி யிடங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். எனவே அரசு கல்லூரிகளில் உள்  கட்டமைப்பு, போதுமான ஆசிரி யர்கள் நியமனம், தேவையான நிதி  ஒதுக்கீடு செய்ய வேண்டும். பணி  மறுக்கப்பட்டுள்ள 69 உதவி பேராசி ரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.  இந்த பிரச்சனையில் அரசும், அதிகாரிகளும் தொடர்ந்து அலட்சிய மாக செயல்பட்டால் மாணவர்கள், இளைஞர்கள், இதர பகுதி பொது  மக்களை திரட்டி தொடர் போராட் டங்களை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும்  என்பதையும் அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.