புதுதில்லி,நவ.1- ஜார்க்கண்ட் சட்டமன்றத் திற்கு நவம்பர் 30ஆம் தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோ ரா புதுதில்லியில் வெள்ளியன்று அறிவித்தார். இதில் நாட்டிலேயே முதல் முறையாக வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடி தபால் ஓட்டு முறை யில் வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் பாஜக அரசின் பதவிக்காலம் ஜனவரி 5 ஆம் தேதியுடன் முடிவுக்கு வரு கிறது. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலுக் கான தேதியை தேர்தல் ஆணை யம் அறிவித்துள்ளது.