விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் வாழை, மிளகாய், வெங்காயம் மற்றும் கொத்தமல்லி ஆகிய பயிர்களுக்கு விவசாயிகள் உடனடியாக காப்பீடு செலுத்தலாம்என மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாநில அரசு பங்களிப்புடன் மத்திய அரசின் காப்பீட்டுத்திட்டத்தில் ராபி பருவம் தொடங்கியுள் ளது. தோட்டக் கலைப் பயிர்களான வாழை, வெங்காயம், மிளகாய் மற்றும் கொத்தமல்லி ஆகிய பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகையை விவசாயிகள் செலுத்தலாம். கடன் பெற விரும்பும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட வங்கிகளில் கட்டாயம் காப்பீட்டில் பதிவு செய்யப்படுவார்கள். கடன் பெறாதவர்கள், பொது சேவை மையங்கள், தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும்வங்கிகள் மூலம் செலுத்தலாம். வாழைக்கு ஏக்கருக்கு ரூ.3115, வெங்காயம் ரூ.1552, மிளகாய் ரூ.1222, கொத்தமல்லி ரூ.585 என்ற அளவில் காப்பீடுசெலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.