அருப்புக்கோட்டை:
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மின்சார மசோதா 2020-ஐ திரும்பப் பெறுவதுடன், தொழிலாளருக்கு விரோதமாக மாற்றப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை ஆட்சேபித்தும், அருப்புக்கோட்டையில் அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தொமுச செயலாளர் சுந்தர்ராஜ், ஏஐடியுசி பரமேஸ்வரன், விசிக தொழிற்சங்க செயலாளர் குமரவேல் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியுமாவட்ட உதவி தலைவர் எம்.அசோகன், செயலாளர் திருப்பதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம். தாமஸ், நகர் செயலாளர் எஸ். காத்தமுத்து, ஒன்றிய செயலாளர் எம்.கணேசன், ஏஐடியுசி இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர்.
மதுரை
விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் யா.ஒத்தக்கடையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் எஸ்.பி.இளங்கோவன், சிஐடியுமாநகர் மாவட்டச் செயலாளர் இரா.தெய்வராஜ், மா.கணேசன், வி.பிச்சைராஜன், நல்.மூர்த்தி, எம்.எல்.எப் எஸ்.மகபூப்ஜான், எல்பிஎப் சி.கருணாநிதி, பாதர்வெள்ளை (எச்எம்எஸ்), பி.ஜீலன்மூர்த்தி (ஐஎண்டியுசி), பா.காளிதாஸ் (சிபிஐ), நிறைவு மார்க்சிஸ்ட் கட்சியின் கிழக்கு தாலுகாச் செயலாளர் எம்.கலைச்செல்வன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.மாயாண்டி, கஜேந்திரன், மனோகர், கே.சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மதுரை புறநகர் மாவட்ட தையல் தொழிலாளர் சங்கம் சார்பில் சோழவந்தானில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பி.பொன்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாடிப்பட்டி ஒன்றியச் செயலாளர் வேல்பாண்டி, வெங்கடேசன், இருளப்பன் உள்ளிட்ட பலர்கலந்துகொண்டனர்.