தஞ்சாவூர்/கரூர், செப். 27 - மின் வாரியத்தில் பணியாற்றி வரும் அனைத்து தரப்பு ஊழியர் களுக்கு எதிரான, வாரிய ஆணை எண். 2-ஐ ரத்து செய்ய வேண்டும். அவுட் சோர்சிங் மற்றும் மறு பகிர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் வாரிய அனைத்து தொழிற்சங்கங் களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக திங்கட்கிழமை மாநிலம் முழு வதும் காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது. தஞ்சை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், பொறி யாளர் சங்க மாநில துணைத் தலைவர் சுந்தர்ராஜ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பு சார்பாக மாநில செயலாளர் எஸ்.ராஜாராமன், வட்டச் செயலாளர் பி.காணிக்கைராஜ், வட்டத் தலைவர் அதிதூத மைக்கேல்ராஜ், பொருளாளர் சங்கர், பொறியாளர் சங்கம், ஐக்கிய சங்கம், அண்ணா தொழிற்சங்கம், ஏ.இ.எஸ்.யூ, பொறியா ளர் கழகம், எம்ப்ளாயீஸ் பெடரேஷன், ஜனதா சங்கம், ஐஎன்டியூசி, அம்பேத் கர் சங்கம், ஓய்வு பெற்றோர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் பங்கேற்றன. சிஐ டியு மாவட்டத் தலைவர் டி.கோவிந்த ராஜூ விளக்க உரையாற்றினார்.
கரூர்
கரூர் பகிர்மான வட்டத்தின் சார்பில் மின்வாரிய தொழிலாளர்கள், பொறியா ளர்கள் கரூர் 80 அடி சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். போராட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். மின் ஊழியர் மத்திய அமைப் பின் (சிஐடியு) மாவட்டச் செயலாளர் க.தனபால், தமிழ்நாடு ஓய்வு பெற்றோர் சங்க மாவட்டத் தலைவர் வி.பி.கந்த சாமி, டாக்டர் அம்பேத்கர் சங்க தலைவர் க.பால்ராஜ் ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.