tamilnadu

வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெறுக மத்திய அரசிற்கு எதிராக விவசாயிகள் எழுச்சி முழக்கம்

சேலம், செப்.25- விவசாயத்தையும், விவசாயிகளை யும் சீரழிக்கின்ற மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து வெள்ளியன்று தமிழகம் முழுவதும் ஆவேச போராட்டங்கள் நடை பெற்றன.

மத்தியில் ஆளும் பாஜக அரசு விவ சாயிகளையும், விவசாயத்தையும் கார்ப்பரேட் பெரு முதலாளிகளிடம் ஒப்படைக்கும் வகையில் வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக, அத்தியாவசிய பொருட்களை பதுக்கி விலையேற்றத்துக்கு வழிவகுக்கும் அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்த மசோதா, ஒப்பந்த சாகுபடி முறைக்கு வழிவகுக்கும் விவசாயிக ளுக்கான விலை உத்தரவாதம் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு சட்ட மசோதா மற்றும் இல வச மின்சாரத்தை பறிக்கும் மின் திருத்த சட்ட மசோதா ஆகிய சட்ட திருத்த மசோ தாக்களை நிறைவேற்றியுள்ளது.

இந்த விவசாயிகள் விரோத இந்த மசோதாக் களை திரும்பப் பெறவேண்டும்  என வலியுறுத்தி நாடு முழுவதும் விவ சாயிகளின் பேரழுச்சி பெரும் போராட் டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக அகில இந்திய விவசா யிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் வெள்ளியன்று நாடு முழுவதும் வலு வான போராட்டங்களில் ஈடுபடுவது என அறிவித்தது.

இதன்ஒருபகுதியாக, சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் முன் னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ் நாடு விவசாயிகள் சங்க தலைவருமான பி.டில்லிபாபு தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தி, சிபிஐ மாவட்ட செயலாளர் மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்று கைதாகினர்.

இதேபோல், சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், பெத்தநாயக் கன்பாளையம், வாழப்பாடி, ஓமலூர், மேச்சேரி,கொங்கணாபுரம் ஆகிய இடங்களில் சாலை மறியல் போராட் டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பொன்னுசாமி, மாவட்ட செயலாளர் எ.ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் அன்பழகன், விவசாயிகள் தொழிலா ளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.கண பதி, மாவட்ட தலைவர் தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

கோவை

கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் வி.பி.இளங் கோவன், சு.பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் மறியல் மற்றும் முற் றுகைப் போராட்டம் நடைபெற்றது. காவல்துறையினரின் பலத்த கெடு பிடிகளுக்கிடையிலும் விவசாயிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து மத்திய, மாநில அரசு களுக்கு எதிராக ஆவேச முழக்கங் களை எழுப்பினர்.

மேலும், இப்போ ராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி,  சிஐடியு மாவட்ட தலை வர் சி.பத்மநாபன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி, மாதர் சங்க மாவட்ட செய லாளர் ஏ.ராதிகா, வாலிபர் சங்க மாவட் டச் செயலாளர் கே.எஸ்.கனகராஜ்,   விவசாய தொழிலாளர் சங்க மாவட் டச் செயலாளர் ஆர்.செல்வராஜ் உள் ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 மேலும், விவசாயிகளின் போராட் டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கத்தி னர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு, எல்பிஎப், எம்எல்எப், ஏஐடி யுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், எஸ்டி டியு, ஏஐசிசிடியு உள்ளிட்ட தொழிற் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.  

இதேபோல், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் வி.எஸ்.பரம சிவம் தலைமையில் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அன்னூரில் நடைபெற்ற போராட் டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டக் குழு உறுப்பினர் பி. சுகுமார், சுப்பையன், பழனிச்சாமி, சண்முகம், அர்ஜுன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தருமபுரி

தருமபுரியில் தமிழ்நாடு  விவசாயி கள் சங்க மாவட்ட தலைவர் கே.என். மல்லையன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய விவசாயிகள் மஞ் சங்க மாவட்ட செயலாளர் கே.கோவிந்த ராஜ், சிபிஐ விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர்  எஸ்.சின்னசாமி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசி னர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கிரை ஸாமேரி, மாவட்ட துணைத் தலைவர் கே.பூபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.மாரிமுத்து, டி.எஸ்.ராமச்சந்தி ரன், நகர செயலாளர் ஆர்.ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர்கள் தருமபுரி என். கந்தசாமி, நல்லம்பள்ளி கே.குப்புசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இதை யடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அரூர் ரவுண்டானா சாலையில் நடைபெற்ற மறியலுக்கு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் எஸ்.கே. கோவிந்தன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்  ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சிசுபாலன், எம்.முத்து, ஒன்றிய செயலாளர்கள் அரூர் ஆர்.மல்லிகா, பாப்பிரெட்டிபட்டி சி.வஞ்சி, மொரப் பூர் கே.தங்கராஜ் ஆகியோர் பேசினர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடு பட்டவர்களை போலீசார் கைது செய் தனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கூடலூர், அம்பலமூலா ஆகிய பகுதி களில் நடைபெற்ற மறியல் போராட் டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் என்.வாசு, செயலாளர் ஏ.யோகண்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எல்.சங்கரலிங் கம், எம்.ஏ.குஞ்ஞிமுகமது, கே.ராஜன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் சி.மணி கண்டன், பொருளாளர் சி.வினோத்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

 நாமக்கல் மாவட்டத்தில் கல்லாங் காட்டுவலசு, எருமப்பட்டி, திருச்செங் கோடு, பரமத்திவேலூர், ஆயில்பட்டி  பகுதிகளில் மறியல் மற்றும் ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன.

இதில், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்  ஏ.ஆதிநாராயணன், மாவட் டச் செயலாளர் பி.பெருமாள், கரும்பு விவசாய சங்க மாநில துணைத்தலை வர் செ.நல்லாக்கவுண்டர், தனேந்தி ரன், முருகேசன், தங்கமணி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலை வர் சி.துரைசாமி, செயலாளர் வி.பி. சபாபதி, செல்வராஜ்,  இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஐ) மாவட்டச் செயலாளர் எஸ்.சின்ன சாமி, உழவர் உழைப்பாளர் கட்சி மாந கர செயலாளர் ஜீவா கிட்டு ஆகி யோர் தலைமை வகித்தனர்.

இப் போராட்டத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் கே.செல்ல முத்து, மாவட்ட செயலாளர் பி.சோம சுந்தரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செ.முத்துக் கண்ணன்  உட்பட நூற்றுக்கும் மேற் பட்டோர் பங்கேற்று கைதாகினர்.

உடுமலை மத்திய பேருந்து நிலை யத்தின் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட துணை தலை வர் பாலதண்டபாணி, ராஜகோபால், உடுக்கம்பாளையம் பரமசிவம், விவ சாய தொழிலாளர் சங்கத்தின் மாவட் டத் தலைவர் சி. சுப்பிரமணியம், மாவட் டச் செயலாளர் பஞ்சலிங்கம், சிஐ டியு மாவட்ட துணை செயலாளர் ஜெக தீசன், விஸ்வநாதன், கி. கனகராஜ், சிபிஐ ரணதேவ், செளந்தர்ராஜ் உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண் டனர்.

குடிமங்கலம் ஒன்றியம் பெதபம் பட்டி நால் ரோட்டில் விவசாய சங்கத் தின் ஒன்றிய செயலாளர் வெ. ரங்க நாதன் தலைமையில் நடைபெற்ற மறி யல் போராட்டத்தில் விவசாய சங்க நிர் வாகிகள் ஸ்ரீதர், லட்சுமணசாமி, தங்க வடிவேல், சுந்தர்ராஜ், வெங்கடேஷ், மாதர் சங்கத்தின் சசிகலா உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

மடத்துகுளம் நால்ரோடு பகுதி யில் நடைபெற்ற மறியல்  போராட்டத் தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் முத்துசாமி, ராஜரத்தினம், ஆர்.வி.வடிவேல், செல்லத்துரை, விவ சாய தொழிலாளர் சங்கத்தின் ஆறு முகம், கட்டுமான சங்கத்தின் தெண்ட பாணி, வாலிபர் சங்கத்தின் கார்த்தி கேயன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

தாராபுரம் அண்ணாசிலை முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் என்.வெங்கட்ராமன் தலை மையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கட்சி சார்பற்ற விவ சாயிகள் சங்க நிர்வாகி ஈஸ்வரமுர்த்தி, சிபிஎம் தாலுகா செயலாளர் என்.கனக ராஜ், சிஐடியு நிர்வாகிகள் பொன்னுச் சாமி, மேகவர்ணன், முத்துசாமி, சத் தீஸ்வரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 அவிநாசியில் நடைபெற்ற மறி யல் போராட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட துணை செயலா ளர் எஸ்.வெங்கடாச்சலம், ஒன்றிய தலைவர் முத்துரத்தினம், ஒன்றிய கவுன்சிலர் பி.முத்துச்சாமி, உழவர் உழைப்பாளர் கட்சியின் கே.உலக நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

 ஊத்துக்குளியில் நடைபெற்ற மறி யல் போராட்டத்தில் தமிழ்நாடு விவசா யிகள் சங்க தாலுகா செயலாளர் எஸ்.குழந்தைசாமி, சிபிஐ விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ஜி.கே.கேச வன், மாதர் சங்க தாலுகா செயலாளர் சரஸ்வதி, மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கே.ஏ.சிவசாமி, சிபிஐ தாலுகா செயலாளர் வி.கே.முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

ஈரோடு பேருந்து நிலையம் முன் பாக நடைபெற்ற மறியலில் விவசாயி கள் சங்க மாநில துணைத் தலைவர் ரவீந்திரன், சிஐடியு மாவட்ட தலைவர் சுப்ரமணியன், செயலாளர்  ஸ்ரீராம், துணைத்தலைவர் ஆர்.ரகுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடம்பூர் பேருந்து நிலையம் முன் பாக நடைபெற்ற மறியலில் மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் வீ.சடையப்பன், வட்டார செயலாளர் சி.ராசப்பன்,  சிபிஎம் வட்டார செயலாளர் துரை சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

கோபி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற மறியலில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க முன்னாள் மாநிலத் துணைத்தலைவர் எஸ்.முத்துசாமி, மாவட்ட துணைத்தலைவர் கே.எம்.விஜயகுமார், சிபிஐ விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாநில நிர்வாகி வெங்கடாசலம், விவசாயத் தொழிலா ளர் சங்க கோபி தாலுகா செயலாளர் வி.ஆர்.மாணிக்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்று கைதாகினர்.