tamilnadu

img

ஆறு வருடங்களுக்கு முன் காணாமல் போன மேற்கு வங்க பெண்மணி சிபிஎம் முயற்சியால் குடும்பத்தினருடன் சேர்ப்பு

சேலம், ஆக. 14- ஆறு வருடங்களுக்கு முன்பு காணாமல் போன மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முயற்சியால் அவரின் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஷீமா ரூத்  என்கிற பெண் மணி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பயணத்தின்போது காணாமல் போய்விட் டார். இதன்பின் ரயில் பயணத்தின் மூலமாக தடம் மாறி பல இடங்களில் அலைந்துள் ளார்.

இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் சேலம் வந்த அவர் சேலத்தில் இருந்து பல இடங்களுக்கு சென்றுள்ளார். அவர் பேசும் மொழி முற்றிலும் புரியாத நிலையில் இருந்த தால் யாரும் உதவி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும் இவரை பலர் சந்தே கப்பட்டு அடித்தும், மிரட்டியும் உள்ளனர். இந்நிலையில், சேலம் நங்கவள்ளி பகுதியில் சுமார் 70 நாட்களுக்கு முன்பு கை மற்றும் காலில் காயத்துடன் பரிதவித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்மணியை மார்க் சிஸ்ட் கட்சியினர் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்தனர்.

இதன்பின்னர் அவர் குறித்த விவரங்களை அறிய முற்பட்டனர். இருப் பினும் அவரின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடியவில்லை. அதனைத் தொடர்ந்து வீடியோ, புகைப்படம் எடுக்கப் பட்ட பின்பு அந்தப் பெண்மணி காகிதத்தில் எழுதி கொடுத்த சில விவரங்கள் சமூக ஊட கங்கள் மூலம் பகிரப்பட்டது. இதில் அவர் பேசும் மொழி பெங்காலி என தெரிய வந்தது. இதனால் அவர் மேற்கு வங்க மாநி லத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என யூகித்து  மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஹன்னன் முல்லா, மேற்கு வங்க மாநில பொதுச்செய லாளர் சூரியகாந்த் மிஸ்ரா மற்றும் பீகார், ஒரிசா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங் களைச் சேர்ந்த தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பேசப்பட்டது.  

இதில், மேற்குவங்க மாநில விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர்  அமோல் ஹல்தார், சிபிஎம் பங்குரா மாவட்டச் செய லாளர் தபோல் சக்கரவர்த்தி முயற்சியில் அப்பெண்மணி நாணுவா கிராமத்தைச் சேர்ந்த அவரது வீட்டை கண்டுபிடித்தனர்.  நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அந்த குடும் பம் 6 வருட காலமாக பல இடங்களில் தேடிக் கிடைக்காத விரக்தியில் இருந்த நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மூலம் கிடைத்த இந்த செய்தி அக்குடும்பத்தாருக்கு பெரும் மகிழ்ச்சியை உருவாக்கியது. இதை யடுத்து தகவலறிந்த ஷீமாரூத்தின் குடும்பத் தார் சேலம் வந்தனர்.

அவர்களிடம் ஷீமாரூத் ஒப்படைக்கப்பட்டார்.   இந்நிகழ்வில், சிபிஎம் மாவட்ட செயலா ளர் பி.ராமமூர்த்தி, மாநில குழு உறுப்பினர் டி. ரவீந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் மற் றும் அப்பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி யினர் உட்பட பலர் பங்கேற்றனர். அப் போது, ஷீமாரூத்தின் மற்றும் அவரின் குடும்பத்தினர் தன்னை அரவணைத்த மார்க்சிஸ்ட் கட்சியினருக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினர்.

கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து

மேற்கு வங்க பெண்மணியை கவன முடன் பாதுகாத்து, அவரின் குடும்பத்தி னருடன் ஒப்படைத்த நிகழ்ச்சியை கேள்விப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ் ணன், நங்கவள்ளி ஒன்றிய சிபிஎம் தலைவர்களுக்கும், பெண்மணியை பாதுகாத்த சுதா, மேனகா,செல்லம் மாள் ஆகியோரையும் செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டுகளை தெரிவித்தார்.