இளம்பிள்ளை, ஜன. 29- காடையாம்பட்டி பகுதியில் நீர்வழி பாதை ஆக்கிரமிப்பை தடுக்க அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர் சேலம் மாவட்டம், இடங்கண சாலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிக ளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மக்கள் வசித்து வருகின்ற னர். இப்பகுதியில் உள்ள காடையாம் பட்டி ஏரி சுமார் 47 ஏக்கர் நில பரப்ப ளவில் உள்ளது. இந்த ஏரியின் மூலம் சுற்றுவட்டார விவசாயிகள் பயன டைந்து வந்தனர். இந்த ஏரிக்கு சித்தர் கோவில் கஞ்சமலையில் இருந்து மழை காலங்களில் அதிக அளவில் தண்ணீர் வருவது வழக்கமாக உள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக காடையாம்பட்டி ஏரிக்கு மழை தண் ணீர் வருவது தடைப்பட்டுள்ளது. இத னால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட் டம் குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இடங்கணசாலை பேரூ ராட்சி பகுதியில் கடந்த ஆண்டு கடும் வறட்சியின் காரணமாக குடிநீர் பற் றாக்குறை ஏற்பட்டு தண்ணீர் கேட்டு பொதுமக்கள் தொடர் போராட்டங்க ளில் ஈடுபட்டனர். இந்நிலையில், காடையாம்பட்டி பகுதியில் தனிநபர்களுக்கு சொந்த மான வீட்டு மனைகள் விற்பனை செய் வதற்காக ஏரிக்கு வரும் நீரோடை களை ஆக்கிரமித்து சாலை அமைக்கும் பணிகளை நில உரிமையாளர்கள் செய்து வருகின்றனர். இதுபோன்று ஏரிக்கு வரும் நீரோடைகளை பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ள தாக தெரியவந்துள்ளது. இது குறித்து பொது மக்கள் கூறு கையில், தற்சமயம் ஏரியில் வண்டல் மண் எடுக்கப்பட்டு ஏரி அதிக அள வில் ஆழம் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற ஆக்கிரமிப்பினால் ஏரிக்கு வரும் மழைநீர் தடைபடும். நீர்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி சுத்தம் செய்து ஏரி, குளம், குட்டைகளுக்கு மழை நீர் வருவதை அதிகாரிகள் உறுதி செய்திட வேண் டும். இனிவரும் காலங்களில் இப்பகுதி யில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாத வகை யில் அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என அப்பகுதி பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.