சேலம், மே 11-தஞ்சை அரசு விரைவுப் போக்குவரத்து அதிகாரியின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து சேலத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ்சை சிஐடியு மாவட்ட தலைவர் செங்குட்டுவனை பழிவாங்கும் வகையில் இடைநீக்கம் செய்த அரசு விரைவு போக்குவரத்துகழக அதிகாரியை கண்டித்து சேலம் அரசு விரைவு போக்குவரத்து கழகம் பணிமனை முன்பு சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகி எம்.லியாகத் அலி தலைமை வகித்தார்.இதில் சிஐடியு அரசு விரைவு போக்குவரத்து கழக சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் என் முருகேசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க சேலம் கோட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, துணை பொதுச்செயலாளர் செந்தில், ஜான்சன் பேட்டை பணிமனை செயலாளர் இளவழகன், விரைவு போக்குவரத்து நிர்வாகிகள் செல்லப்பன், சந்திரன் உள்ளிட்டு பலர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.